தரமான செவிப்புலன் கருவிக்கு விஷன் கெயாரை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

செவிப்புலன் கருவி என்பது செவிப்புலன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட நபரொருவரின் கேட்டல் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சிறிய இலத்திரனியல் சாதனமாகும். இச்செவிப்புலன் கருவியை, செவிப்புலன் குறைபாடுள்ள நபர்கள் தமது அன்றாட தொடர்பாடல் தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு இக்கருவியின்றி தொடர்பாடலை மேற்கொள்வது சிரமம் மிகுந்தது. இலங்கை வர்த்தக சந்தையில் இக்கருவிகள் ஏராளமான வர்த்தக பெயர்களில் பல்வேறுபட்ட கம்பனிகளில் உங்களால் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. சிலர் செவிப்புலன் கருவிகள் தொடர்பாக குறிப்பிட்ட அளவிற்கு அறிந்துள்ள போதிலும், செவிப்புலன் கருவியை உபயோகிக்கும் அநேகமான பாவனையாளர்கள் அக்கருவியிலிருந்து பெறக்கூடிய குரல்களில் தெளிவுத்தன்மை, புரோகிராம் (Program) மாற்றல், செவிப்புலன் கருவியை வேறு இலத்திரனியல் சாதனங்களுடன் இணைத்தல், எல்லாவற்றுக்கும் மேலாக வெளியில் தெரியாத செவிப்புலன் கருவிகள் போன்ற இதர பயன்கள் பற்றி அறிந்திருப்பதில்லை.

விஷன் கெயாரின் செவிப்புலனியல் பிரிவினராகிய நாம் உங்களுடைய நாளாந்த வாழ்கையை இலகுவாக்கவும் தரமான நம்பிக்கை மிகுந்த சேவையை வழங்கவும் என்றும் தயாராகவுள்ளோம். மேலும் எம்முடன் இணைந்திருக்கும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, அனுபவம் வாய்ந்த செவிப்புலனியலாளர்கள் மற்றும் செவிப்புலன் கருவி நிபுணர்கள் மூலம் உங்களுக்கு நவீன தொழிநுட்ப உபகரணங்கள் மூலமான முழுமையான செவிப்புலன் பரிசோதனைகள் ஊடாக உங்களின் கேட்டல் குறைபாட்டிற்கேற்ற உங்கள் வசதிக்கு ஏற்ப செவிப்புலன் கருவியை பெற்றுக்கொள்ள முடியும்.

வினைத்திறனான நம்பிக்கை மிகுந்த சேவையை வழங்குவதே விஷன் கெயார் செவிப்புலன் பிரிவினராகிய எமது தனித்துவம். செவிப்புலன் கருவியொன்றை கொள்வனவு செய்யும்போது அதன் விலையை மட்டுமல்லாது கொள்வனவுக்கு பின்னரான சேவைகளையும் கருத்தில் கொள்வது அவசியம்.

நீங்கள் நீண்ட காலமாக சலரோக நோயினால் அல்லது உயர் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுபவராயின் வயதுடன் உங்கள் செவிப்புலனும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அவ்வாறு பாதிப்பை உணர்வீர்களாயின் நீங்கள் செய்ய வேண்டியது விஷன் கெயாரை தொடர்பு கொண்டு உங்களுக்கு வசதியான நேரத்தில் ஒழுங்கான தரமான செவிப்புலன் பரிசோதனை ஒன்றை செய்துகொள்வதாகும். இதன் மூலம் எந்தளவிற்கு உங்கள் கேட்டல் திறனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

விஷன் கெயார் உங்கள் டிஜிட்டல் செவிப்புலன் கருவிகளுக்கு 2 வருட உத்தரவாதம் வழங்குவதுடன் கொள்வனவின் பின்னர் இலவசமாக சேவிஸ் (service) செய்துகொள்ள முடியும். 6 மாதத்துக்கு ஒருமுறை கருவி சரிபார்ப்பு சோதனை மற்றும் 3 மாதத்துக்கு ஒருமுறை சேவிஸ் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் செவிப்புலனில் ஏற்படும் மாற்றத்தினை உங்களால் இனன்கானக்கூடியதாக இருப்பதுடன் கருவியை நீண்டகாலம் பாவிக்க கூடியதாக இருக்கும். இச்சேவைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விஷன் கெயாரில் ஒரு முன் பதிவை செய்து கொள்வது மட்டுமே.

இவை அனைத்துக்கும் மேலாக உங்கள் பண வசதிக்கு ஏற்ற நவீன தொழிநுட்ப மற்றும் வெளியில் தெரியாத காதின் உட்புறமாக பொருத்தும் சிறிய செவிப்புலன் கருவிகளை விஷன் கெயாரில் நீங்கள் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

செவிப்புலன் குறைபாட்டால் அவதிப்படும் உங்களின் தரமான வாழ்க்கைக்கு பொருத்தமான தரமான சேவைகளை வினைத்திறனுடன் வழங்க விஷன் கெயார், செவிப்புலனியல் பிரிவினராகிய நாம் என்றும் தயாராக உள்ளோம். நாடளாவிய ரீதியில் பரந்துள்ள எமது செவிப்புலனியல் கிளை வலையமைப்பில் இன்றே

இணைந்து எமது சேவைகளைப் பெற்றிடுங்கள்.

சிவராமலிங்கம் விஜயசாந் - 076- 8554976

விஷன் கெயார் ஆப்டிகல் சேவிசஸ் (வரை) தனியார் நிறுவனம்


Featured Posts